Administration
Mission Statement
Constitution
Cabinet
Tamil Eelam Nation Card
 
 







TGTE
CONSTITUTION OF THE TRANS NATIONAL GOVERNMENT OF TAMIL EELAM
(TGTE)

The English-language version of the constitution is being translated and will be posted here as soon as it is done.

The Updated Tamil version is below.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்
(நா.க.த.அ)
அரசமைப்பு
முகப்புரை
சட்டத்தின் ஆட்சி, மனித உரிமைகளுக்கு மதிப்பு, சனநாயகம், அனைத்துத் தனி மனிதர்களுக்குமான சமத்துவம் ஆகிய கொள்கைகளுக்கும், தேசியஇனங்களின் சுயநிர்ணய உரிமைக்கும் இணங்க,

தமிழீழ மக்கள் உயிர் பிழைத்து வாழ்வதையும், அவர்களின் உடல்சார்ந்த பாதுகாப்பையும் உறுதி செய்யவும் தீர்மானித்து,

இலங்கைத்தீவில் வெளிநாடுகளின் ஆக்கிரமிப்பின் முன்பு தமிழ,; சிங்களம் என இராச்சியங்கள் தனித்தனியாக இருந்தன என்பதைக் கருத்திற்கொண்டும;

தமிழீழ மக்களுக்கும் சிங்கள மக்களுக்குமான உறவுகளின் வரலாறு என்பது அடுத்தடுத்து வந்த சிறிலங்கா அரசாங்கங்கள் வாக்குறுதிகளை மீறியதும், சிறிலங்கா அரசுக்கும் தமிழீழ மக்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் முறைப்படி செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தங்களையும் உடன்படிக்கைகளையும் ஒருதரப்பாக நீக்கம் செய்ததுமான தொடர் போக்காகவே இருந்துள்ளது என்பதை அறிந்துணர்ந்து,

அடுத்தடுத்து வந்துள்ள சிறிலங்கா அரசாங்கங்கள் அரை நூற்றாண்டு காலத்திற்கும் மேலாகத் தமிழர்களுக்கு எதிராக இனப்படுகொலையும் மானுட விரோதக் குற்றங்களும் போர்க் குற்றங்களும் புரிந்துள்ளன என்பதையும் மனதிலிருத்தி,

கடந்த 1976ஆம் ஆண்டின் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்குப் பின் நடைபெற்ற தேர்தலில் ஈழத்தமிழரின் மரவுவழித் தாயகத்தில் தமிழீழ மக்களுக்கான சுதந்திரமும், தமிழ் மக்களின் இறைமையும், மதச்சார்பின்மையும் கொண்ட அரசை நிறுவும்படி தமிழீழ மக்கள் தம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்குக் கட்டளையிட்டார்கள் என்பதைக் கவனத்திற்கொண்டு,

சிறிலங்கா அரசின் மூர்க்கத்தனமும், இலங்கைத் தீவில் தமிழர்களுக்கு அரசியல் இடைவெளி இல்லாமற் போனதும் சேர்ந்து கொண்டதால் தமிழ் மக்கள் அளித்த கட்டளையை நிறைவேற்றுவதற்கான தமிழர் அறப் போராட்டம் பயனற்றுப் போயிற்று என்பதை மனத்திலிருத்தி,

நாற்பதாண்டு காலம் அறவழியிலும், அமைதி வழியிலும் அரசமைப்புச் சட்டத்துக்குட்பட்டு நடைபெற்ற போராட்டம் பயனற்றுப் போன பிறகும், அமைதி வழியில் முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு வழியற்றுப் போனதாலும்தான், தற்காப்பு வழிமுறை என்ற வகையிலும் தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை ஈடேறச் செய்வதற்கான கருவி என்ற வகையிலும் தமிழர்களின் ஆயுதப் போராட்டம் எழுந்தது என்பதை மனத்திலிருத்தி,

தமிழர்களின் அரசியல், ஆயுதப் போராட்டங்களும் அதன் பயனாக உருவாகிய தமிழீழ நடைமுறை அரசும், தமிழ் மக்களின் அரசியல் வேணாவாவை வெளிப்படுத்துவதற்கான அரசியல் வெளியைத் தோற்றுவித்தன என்பதை மனத்திலிருத்தி,
பிரித்தானியாவின் காலணித்துவத்திலும் சிறிலங்காவின் அடக்குமுறையலும் இழந்த தமிழர் இறைமையும் தமிழீழத்தின் முக்கிய பகுதிகள் 1983 – 2009 காலப்பகுதியில் தமிழர்களால் மீண்டும் மீட்கப்பட்டு தனியரசாக நிர்வகிக்கப்பட்டதையும் கருத்திற்கொண்டும்,

2002 இல் நோர்வே ஊடாக ஏற்படுத்தப்பட்ட சமாதான உடன்படிக்கையில் தமிழர்களால் சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால அரசாங்க நிர்வாக அமைப்பை சிறிலங்கா அரசு ஒரு தலைப்பட்சமாக முறித்துக்கொண்டதையும் கருத்திற்கொண்டு

சிறிலங்காh அரசின் இனப்படுகொலைகளும்; அரசபயங்கரவாதமும் தமிழர்களின் திறனை வலுக்குன்றச் செய்து, அவர்கள் அனுபவித்து வந்த அரசியல் வெளியை அழித்துவிடுகின்றன என்பதைக் கவனத்திற்கொண்டு,

இலங்கைத் தீவிற்குள் தமிழீழ மக்களின் அரசியல் நாட்டங்களை சுதந்திரமாக தெளிந்துரைக்க அரசியல் வெளி இல்லாமற் போனதைக் கவனத்திற்கொண்டு,
சிறிலங்காhவிற்கு வெளியே இந்த அரசியல் வெளியைத் தோற்றுவிக்க புலம்பெயர் தமிழ்ச் சமூகத்துக்குள்ள வரலாற்றுக் கடமையை உணர்ந்து,

1977 இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தில் தரப்பட்டுள்ள கட்டளைக்கான மீள்வாக்களிப்பு கருத்துக் கணிப்பு நோர்வே, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து, இத்தாலி, பிரித்தானியா, டென்மார்க், அவுஸ்திரேலியா, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகளில் நடைபெற்று, அத்தீர்மானத்துக்குப் பிறகான 30 ஆண்டு காலத்தில் தமிழீழ மக்கள் செய்துள்ள ஈகத்தையும் கவனத்திற்கொண்டு,

கடந்த 2010 மார்ச் 15இல் வெளியிடப்பெற்ற மதியுரைக்குழு அறிக்கையில் தெளிந்துரைக்கப்பட்டவாறு தமிழீழ மக்களின் நாடுகடந்த இயல்பும், நாடுகடந்த அரசியல் செயல் முனைப்பும் மலர்ந்திருப்பதைக் கவனத்திற்கொண்டு,

அவுஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜேர்மனி, சுவிட்சர்லாந்து, பிரான்சு, டென்மார்க், நோர்வே, சுவீடன், பிரித்தானியா, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில்; நடைபெற்ற நா.க.த.அ இற்கான சனநாயக முறைத் தேர்தல்களைக் கவனத்திற்கொண்டு,

ஐக்கிய அமெரிக்காவில் உள்ள பிலடெல்பியாவில் தேசிய அரசமைப்பு மையத்தில் 2010 மே 17ஆம் நாள் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப் பெற்றதைக் கவனத்திற்கொண்டு,
சர்வதேச அங்கீகாரத்துடன் தமிழர்களின் சுய நிர்ணய உரிமையை ஈடேறச் செய்வதற்காகவும் அவர்களின் சுதந்திரமும் இறைமையைச் செலுத்துவதற்காகவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அமைக்கப்பட்டுள்ளது ஆகையால்,

ஈழத்தமிழர்களின் தேசியக்கொடி, மற்றைய தேசிய அடையாளங்களையும், தேசிய சின்னங்களையும், தேசிய நிறங்களையும் தொடர்ந்து பேணிப்பாதுகாக்கவேண்டுமாகையால்
அமைதி, வன்முறை தவிர்ப்பு (அகிம்சை), சகிப்புத் தன்மை, பல்மத, பல்லின சமுகக்கொள்கை, வெளிப்படைத் தன்மை, பொறுப்பாண்மை ஆகிய கொள்கைகளின் அடிப்படையில் சுதந்திரத் தமிழீழ அரசு அமைக்கும் பொருட்டு நா.க.த.அ. தம்மை ஒரு சனநாயக ஆட்சியமைப்பின் ஊடாக வழி நடத்தியுள்ளது ஆகையால்,

குறிப்பாகச் சொன்னால், ஈழத் தமிழர்களின் பொதுவான இலக்கை நோக்கி முன்னேறிச் செல்லவும், உலகெங்கும் வாழும் தமிழர்களின் ஒருமைப்பாட்டை வலுவாக்கவும் முயற்சிகள் செய்ய வேண்டும் ஆகையால்,

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் இரண்டாம் பேரவை இந்த அரசமைப்பைத் தனது அடிப்படை வழிகாட்டியாக இதன்வழிப் பகிரங்கமாக்கி சட்டமாக்கிக் கொள்கிறது.
செப்டெம்பர் 29, 2010 தொடக்கம் ஒக்டோபர் 01, 2010 ஆம் நாள் வரை அமெரிக்காவின் நீயூயோர்க் நகரில் தனதேற்புச் செய்யப்பட்டது.

இயல் - ஐ

நோக்கங்களும் குறிக்கோள்களும்

1. புலம் பெயர் தமிழ் மக்களால் சனநாயக முறையில் தெரிவு செய்யப்பட்ட நா.க.த.அ., னது சுதந்திரமும் இறைமையும் கொண்ட தமிழீழ அரசை நிறுவப் பாடுபடும்.


2. நா.க.த.அ. தனி மனித கௌரவத்தை பங்கமுறாவண்ணம் பேணி நிற்கும்.


3. நா.க.த.அ. ஆனது தாயகத்திலுள்ள மக்கள், புலம்பெயர் ஈழத்தமிழ்ச்; சமூகம், குடிபெயர்ந்து இப்போது உலகின் பிற பகுதிகளில் வாழ்ந்து வரும் ஏனைத்தமிழர்களைக் கொண்டமைந்த உலகத் தமிழ்ச் சமுதாயம் ஆகிய அனைவரின் நலனையும் மேம்படுத்த முற்படும்.


4. நா.க.த.அ. ஆனது புலம்பெயர் நாடுகளில் ஈழத் தமிழ்ப் பண்பாட்டின் தனிச்சிறப்பைப் பேணிக் காக்கவும் மேம்படுத்தவும், புலம்பெயர் தமிழ்ச் சமூகத்திற்குள்ளும் உலகத் தமிழ்ச் சமுதாயத்திற்குள்ளும் நிலவுகிற ஏனைய தமிழ்ப் பண்பாடுகளுடன் அதன் பிணைப்புகளைக் நிலைநிறுத்தவும் முற்படும்.


5. நா.க.த.அ ஆனது தயாகத்தில் கல்விச் செயற்பாடுகள் சிறக்கப் பாடுபடும். அத்துடன் புலம் பெயர் நாடுகளில் தாய்மொழிக் கல்வியினை ஊக்குவிக்கவும் பாடுபடும்.


6. நா.க.த.அ. தாயகத்தில் பொருளியல் வளத்தை மேம்படுத்தும் நோக்கில் அங்கிருந்து மேற்கொள்ளப்படும் தொழிலியல், உயர் தொழில்நுட்பவியல் மற்றும் சேவைத்துறை சார்ந்த ஆக்கங்களுக்கான வணிகச்சந்தர்ப்பங்களை தமிழர் புலம்பெயர்ந்து வாழும் நாடுகளில் தடையிலா பெருகுவதை உறுதி செய்ய முயலும்.


7. நா.க.த.அ. ஆனது தமிழ் மக்கள் மீது இனப்படுகொலையும், இன அழிப்பு, இனசுத்தீகரிப்பு, மானுட விரோதக் குற்றங்களையும், போர்க் குற்றங்களையும் புரிந்தவர்கள் மீது குற்ற வழக்குத் தொடுத்து, பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதை உறுதி செய்யும்.


8. நா.க.த.அ. ஆனது அனைத்துத் தமிழர் வாழ்க்கையின் அனைத்துக் கூறுகளிலும் பாலின சமத்துவத்தை அடிப்படை மனித உரிமையைக் காத்து வளர்த்திடும்.


9. நா.க.த.அ. ஆனது மாவீரர் குடும்பத்தினர், முன்னாள் போராளிகள், போரினால் பாதிப்புற்ற குடும்பத்தினர் ஆகியோரின் கௌரவத்தையும் நல்வாழ்வையும் பேணிப்பாதுகாக்கும்.



நா.க.த.அரசாங்கத்தின் கட்டமைப்பு
நாடு கடந்த தமிழீழ அரசவை
மொழி
• தமிழ்மொழியே நா.க.த.அ இன் அரசகரும மொழியாக இருக்கும். இணைப்பு மொழியாக தேவையேற்படும் பட்சத்தில் வேற்று மொழிகளைகளைப் பயன்படுத்தலாம்.
• வெளியுலக தொடர்பாடல்களுக்கு அந்தந்த நாட்டு மொழிகள் பயன்படுத்தப்படலாம்.
• அனைத்து நா.க.த.அ ஆவணங்களும் தமிழிலும்; இருத்தல் வேண்டும்.


நா.க.த.அ. ஒரு அமைச்சரவையும், ஒரு அரசவையையும்; கொண்டிருக்கும்.
• பிரதமர்
• துணைப் பிரதமர்கள்
• அமைச்சரவை
• நா.க.த.அ அரசவை - அரசவை உறுப்பினர்கள்


அமைச்சரவை
• அமைச்சரவையானது பிரதமர், மூன்று (3) துணைப் பிரதமர்கள், மற்றும் ஏழு (7) அமைச்சர்களையும் உள்ளடக்கி மொத்தமாக பதினொன்று (11) என்ற எண்ணிக்கையில் உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். தேவை ஏற்படின் பிரதமர் இவ் எண்ணிக்கையை கூட்டலாம் அல்லது குறைக்கலாம்.
• நா.க.த.அ தின் நிறைவேற்று அதிகாரம் அமைச்சரவையிடம் இருக்கும், இந்த அரசமைப்பின் வழிவகைகளுக்கிணங்க நேரடியாகவோ, அதன் ஆணைக்குட்பட்ட அலுவலர்கள் வாயிலாகவோ, அது இந்த அதிகாரத்தைப் பயன்படுத்தும். குறிப்பாகச் சொன்னால், அமைச்சரவை பின்வரும் நிறைவேற்று அதிகாரங்களைச் செயல்படுத்த அதிகாரம் அளிக்கப்படும்.
1) சட்டமியற்றும் அரசவையால் குறித்துரைக்கப்பட்ட சட்ட முன்வடிவுகளுக்கும் விதிமுறைகளுக்கும் இசைவளித்து அவற்றைப் பிறப்பித்தல்,
2) சட்டங்களையும், சட்ட வலிமை கொண்ட அவசரச் சட்டங்களையும் பிறப்பித்தல்,
3) கௌரவ விருதுகளையும், பதவி நியமணங்களையும் வழங்குதல்,
4) அரசவையை கூட்டுதல்,
5) தேவைப்படும் போதெல்லாம் அரசவைக்குச் செய்திகளும் உரைகளும் அனுப்புதல்,
6) அரசவைக் கூட்டங்களில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு செயல் வடிவம் கொடுக்கும்
• பொறுப்பானது முழுமையாக அமைச்சரவையைச் சாரும்.

அமைச்சரவைத் தெரிவு
1) நா.க.த.அ. அரசவையானது பிரதம அமைச்சராக ஒரு உறுப்பினரை இரகசிய வாக்கெடுப்பு மூலம் சாதரண பெரும்பான்மையால் தெரிவு செய்யும்.
2) மூன்று (3) துணைப் பிரதமர்களும் இயன்றளவு ஐரோப்பா, வட அமெரிக்கா மற்றும் அவுஸ்தி;ரேலியா-நியுசிலாந்து பிராந்தியங்களுக்கென பிரதமரால்; நியமிக்கப்படுவார்கள்.


3) அமைச்சரவையின் மீதி அமைச்சர்களையும் பிரதமர்;; நியமனம் செய்வார்.


4) ஓவ்வொரு அமைச்சரும் உறுப்பினரும் தமக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புக்களுக்கு தனித்தனியான துணை அமைச்சர்களை நியமிக்கலாம். இந்நியமனமானது அரசவை உறுப்பினர்களில் இருந்து இடம்பெறும். இவ்வாறு நியமிப்பவர்களுக்கு அமைச்சர்களுக்கான உரிமைகள் இருக்காது.


5) அமைச்சர்களுக்கான தகுதிகள்


1. 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பெற்ற மதியுரைக் குழு அறிக்கையில் தரப்பட்டுள்ள வரையறையின்படி தமிழீழத்தின் குடிமகனாகஃகுடிமகளாக இத்தல் வேண்டும். அல்லது ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.



2. எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது, சுயநோக்க செயல்பாடுகளுக்காக தண்டிக்கப்படாதவர்களாய் இருத்தல்வேண்டும். குறிப்பிட்ட உறுப்பினர் அவர் வாழும் நாடு உட்;ப்பட வேறு எந்த நாட்டின் சட்டங்களின் குற்றப்பதிவு நீக்கப்பட்டவராயின் உறுப்பினராகும் தகுதியுடையவராவர்.


3. அரசவையில் தகுதி நீக்க அறிவிப்புச் செய்யப்படாதவராக இத்தல் வேண்டும்.


4. தொடர்ச்சியாக இரண்டு தடவைகளுக்கு மேல் பதவியில் இருக்காதவராக இருத்தல் வேண்டும்.


5. அரசவையால் முன்னர் அமைச்சர் பொறுப்பிலிருந்து அகற்றப்படாதவராய் இருத்தல் வேண்டும்.


6. ஈழத்தமிழ் மக்களின் நலனுக்குக் கேடாக எந்தவொரு நாடுகளிலிருந்தும், எந்தவொரு அமைப்பிலிருந்தும் சேவை, தகுதிநிலை, பொருளியல் நன்மை அடையாதவராய், அனுபவிக்காதவராய் இருத்தல் வேண்டும். இறுதி முடிவு நெறிமுறை ஆணையகத்தால் எடுக்கப்படும்.


7. அமைச்சர் உறுப்பினர் ஒருவர் இறந்தாலோ அல்லது மாற்றீடு செய்யப்பட்டாலோ அல்லது பதவி விலகினாலோ அவருக்கான மாற்றீடு பிரதமரால்;; மூன்று மாத காலத்திற்குள் நிறைவு செய்யப்பட வேண்டும்.


8. இவ்வாறு தெரிந்தெடுக்கப்படும் அமைச்சர் முந்தைய அமைச்சரவை உறுப்பினரின் எஞ்சிய பதவிக் காலத்தை நிறைவு செய்வார்.


பிரதமரின் பதவிக் காலம்

• இந்த அரசமைப்புக்கு இணங்கவும் பதவிக் காலம் முடிவதற்கு முன்னதாகவும் பதவி நீக்கம் செய்யப்படும் சந்தர்;ப்பத்தை விலக்கிப் பார்த்தால், பிரதமரின்; பதவிக் காலம் மூன்று (3) ஆண்டுகளாக இருக்கும்.
• பிரதமர்; செயற்பட முடியாத நிலையில் அவ்விடத்திற்கு துணைப் பிரதமர்களில் ஒருவரை பதில் பிரதமர் பிரதமர் நியமிப்பார்.
• அவ்வாறு பிரதமரால் பதில் பிரதமர் நியமிக்கப்பட முடியாத நிலை ஏற்படுமாயின் துணைப் பிரதமர்களில் ஒருவர் அவ்விடத்திற்கு தெரிவாவர். இத்தெரிவு அரசவையின் அறுதிப்பெரும்பான்மையைப் பெறவேண்டும்.
• பிரதமர்;, துணைப் பிரதமர்;கள்; மற்றும் அமைச்சர்கள் அனைவரும் அரசவைத் தலைவர் அல்லது துணை அரசவைத் தலைவர் முன்னிலையில் பதவி ஏற்பு மற்றும் இரகசியக்காப்பு உறுதியேற்று ஒப்பமிடுவார்கள்.


அமைச்சரவையின் பதவிக் காலம்
1) அமைச்சரவை கலைக்கப்படுதல் அல்லது அமைச்சர்களின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே நீக்கப்படுதல் போன்ற வேறு வகையில் குறித்துரைக்கப்படா விட்டால், அமச்சரவையின் பதவிக் காலம் மூன்று (3) ஆண்டுகளாக இருக்கும்.


2) குறித்துரைக்கப்பட்டவாறு அமைச்சரவை கலைக்கப்படும் சந்தர்ப்பங்களைத்தவிர அமைச்சர் மீண்டும் நியமிக்கப்படுவது செல்லுபடியற்றுப் போகாது ஆனால் ஒரு அமைச்சர் மீண்டும் நியமிக்கப்படும்; போது, தொடர்ச்சியான இரு பதவிக் காலங்களை விஞ்சக் கூடாது.


அமைச்சரவைக்;; கூட்டம்
• பிரதமர்; தேவைப்படும்போது அமைச்சரவைக் கூட்டம் நடத்த அழைப்பு விடுக்கலாம். பிரதமர் இக்கூட்டங்களுக்குத் தலைமை வகிப்பார். அவரில்லாத போது துணைப் பிரதமர்களில்; ஒருவர் தலைமை வகிப்பார்.


அமைச்சரவையின் கடமைகள், பொறுப்புகள், அமைச்சர்கள் நீக்கம்

1) அமைச்சரவையானது அதன் உறுப்பினர்கள் தம் கடமைகளைச் செய்வதற்குக் கூட்டுப் பொறுப்புடையதாகும்;. பொதுவாக அரசவைக்கு அது விளக்கமளிக்கவும், விடை சொல்லவும் பொறுப்புடையதாகும். அமைச்சரவையானது சாதரண பெரும்பான்மையுடன் தீர்மானங்களை நிறைவேற்றலாம்.


2) பிரதமர் அமைச்சர்களுக்கான துறைகளை ஒதுக்கீடு செய்வார்.


3) தேவையைப் பொறுத்து அரசவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு (2ஃ3) மேற்பட்ட பெரும்பான்மையினரின் ஒப்புதலுடன், நேர்வைப் பொறுத்து, அமைச்சரவை முழுவதையும் கலைக்கலாம். அமைச்சர் அல்லது அமைச்சர்கள் அல்லது துணைப் பிரதமர்கள் எவரையும் பிரதமர் பதவி நீக்கலாம்.


4) எந்த நேரத்திலும் பிரதமர் அமைச்சரவையைக் கலைப்பது தொடர்பாக அல்லது தன்னை உட்பட அமைச்சரவை உறுப்பினர்களின் ஒருவரை நீக்குவது தொடர்பாக அறிவுக்குகந்த ஒரு பரிந்துரையைச் செய்வாரேயானால், இப்பரிந்துரை அரசவைக்குப் பணிந்தளிக்கப்பட்டு, அரசவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றிலிரு பங்கு பெரும்பான்மையினரின் ஆதரவோடு அமுலுக்கு வரும்.


5) அமைச்சரவைக முழுவதும் இவ்வாறு கலைக்கப்படுமானால் கலைப்பு நாளிலிருந்து 60க்கு மேற்படாத நாட்களில் புதிய அமைச்சரவை உருவாக்கப்படும்.


6) அமைச்சரவையின் பதவிக் காலம் முடிந்த பிறகும,; புதிதாக உருவாக்கப்படும் அமைச்சரவை பதவியேற்கும் வரையான இடைக்காலத்திற்கு அதே பதவியில் இருக்கும். இந்த உறுப்பின் (3) (4) (5) கூறுகளில் குறித்துரைக்கப்பட்டவாறு குறிப்பிட்ட அமைச்சரவை உறுப்பினர் பதவி நீக்கப்படுவாராயின் அதன்பின் பதவியில் இருக்க மாட்டார். அமைச்சரவை முழுவதும் கலைக்கப்படும் வேளையில், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அல்லது நியமிக்கப்பட்ட அமைச்சரவை பதவியேற்கும் வரை தொடர்ந்து செயற்படும்;; ஆனால் கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பொருட்பாடுகள் தொடர்பாக அவர்கள் எந்தப் புதிய முடிவுகளையும் எடுக்கக் கூடாது.


அரசவை
சட்டமியற்றும் அதிகாரம்
• சட்டமியற்றும் அதிகாரம், ஆணையுரிமை அனைத்தும் அரசவையிடம் தங்கி நிற்கும்; இவ்வாறு இயற்றப்படுவது சட்டமாக வேண்டுமானால் பிரதமரின் இசைவு தேவைப்படும். பிரதமர் இசைவளிக்கமல் விட்டால் அரசவையில் விவாதிக்கப்பட்டு தேவையான மாற்றங்களுடன் வாக்களித்தோரில் மூன்றில் இரண்டு பங்கு பெருண்பாண்மையுடன் சட்டமாக்கப்படும்.

அரசவை
• அரசவை என்பது மக்களால் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் நியமனம் செய்யப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும்.

அரசவையின் இயைபு
• அரசவையானது குறைந்த பட்சம் 115 என்ற எண்ணிக்கையில் தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களையும் இருபதிற்கும் (20) மேற்படாத என்ற எண்ணிக்கையில் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களையும் கொண்டதாய் இருக்கும். இவர்கள் அனைவரும் வாக்குரிமை உட்பட அனைத்து சிறப்புரிமைகளும் கொண்டவர்கள் ஆவர்.

அரசவை உறுப்பினருக்கான தகுதிகள்
• அரசவை உறுப்பினராவதற்குப் பின்வரும் தகுதிகள் தேவைப்படும்:
1) 2010 மார்ச் 15ஆம் நாள் வெளியிடப்பட்ட அறிக்கையில் வரையறுக்கப்பட்டுள்ளபடி தமிழீழக் குடிமகனாகஃகுடிமகளாக இருத்தல் வேண்டும். அல்லது ஈழத் தமிழர் பண்பாட்டு வாழ்வோடு பூர்வீகம், திருமணம், தத்தெடுத்தல் ஆகியனவற்றில் ஏதாவது ஒன்றினூடாக இணைவு கொண்டிருத்தல் வேண்டும்.
2) 17 வயதைப்பூர்த்தி செய்திருத்தல் வேண்டும்.
3) எந்த நீதிமன்றத்தாலும் சுயலாப அல்லது, சுயநோக்க செயல்பாடுகளுக்காக தண்டிக்கப்படாதவர்களாய் இருத்தல்வேண்டும். குறிப்பிட்ட உறுப்பினர் அவர் வாழும் நாடு உட்;ப்பட வேறு எந்த நாட்டின் சட்டங்களின் குற்றப்பதிவு நீக்கப்பட்டவராயின் உறுப்பினராகும் தகுதியுடையவராவர்.
4) தமிழீழ மக்களின் நலனுக்குக் கேடான விதத்தில் பிற நாடுகளிலிருந்து சேவை, தகுதிநிலை அல்லது பொருளியல் நன்மை அடையாதவராய் இருத்தல் வேண்டும்.

5) அரசமைப்பில் கூறப்பட்டுள்ளவாறு நா.க.த. அரசாங்கத்தின் நோக்கங்களை ஏற்றுக் கொள்கின்றவராய் இருத்தல் வேண்டும்.


அரசவையின் பதவிக் காலம்
• குறிப்பிட்ட தவணைக்காலத்திற்கு தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களின் பதவிக்காலம் அந்த அரசவையின் தவணை முடியும்போது முடிவடைகின்றது.


அரசவையின் அமர்வுகள்
• அரசவையின் தலைவரினதும் பெரும்பான்மையான அரசவை உறுப்பினர்களினதும் பரிந்துரைக்கிணங்க அரசவையின் கூட்டத்தை கூட்டுவதற்கான காலம், நேரம,; இடம் குறித்து அரசவைத்தலைவர் அழைப்புவிடுப்பார்.


மேலவை (நிபுணர்கள் குழு)
• மேலவையானது 15 என்ற எண்ணிக்கையிலான உறுப்பினர்களைக் கொண்டிருக்கும்;.
• மேலவை உறுப்பினர்கள் அரசவையின் பரிந்துரையின் பேரில் பிரதமரால் நியமிக்கப்படுவார்கள். சட்டமுன்வடிவு அல்லது வேறுவகைச் சட்டம் எதுவும் மேலவையிலிருந்து பிறப்பிக்க முடியாது.
• அரசவையால் இயற்றப்படும் எந்தவொரு சட்டத்தையும் அல்லது பிரதமர் அல்லது அரசபையால்; மேற்கொள்ளப்படும் எந்த நடவடிக்கையையும் கட்டுப்படுத்தும் தன்மை இல்லாத, கருத்துச் சொல்வதற்காக மேலவைக்கு அனுப்பப்படும்.
• மேலவையின் பதவிக் காலம் அரசவையின் பதவிக்காலத்தை ஒத்ததாக இருக்கும்.

அரசவை உறுப்பினர்களின் உரிமை
• அரசவையின் அமர்வுகளில் விவாதத்திலும் கருத்தாடலிலும் பங்கேற்பதற்கும், பரிந்துரை அல்லது விளக்கமேதும் அளிப்பதற்கும், வாக்களிப்பதற்கும் உறுப்பினர்கள் உரிமை பெற்றவராவர்.

அரசவையின் தலைவர் மற்றும் துணைத் தலைவர்
1) அரசவை ஒவ்வொன்றினதும் முதல் அமர்வின் ஆரம்பத்தில் உறுப்பினர்கள் அரசவைத் தலைவர் ஒருவரையும் துணைத் தலைவர் ஒருவரையும் அரசவை உறுப்பினர்களிடையிலிருந்து இரகசிய வாக்கெடுப்பு மூலம் தெரிவுசெய்வார்கள்.


2) அரசவைத் தலைவரும,; துணைத் தலைவரும் தெரிவுசெய்யப்பட்ட பின், அவர்கள் பதவிகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அரசவைத்தலைவர் அவர்கள் அவைஉறுப்பினர்களுள் மூத்தோராக அடையாளம் காணப்பட்டவர் முன்னால் சட்டம் குறித்துரைத்துள்ள வடிவத்தில் உறுதி எடுத்துப் பதவியேற்பார். துணைத்தலைவர் அரசவைத் தலைவர் முன்நிலையில் சட்டம் குறித்துரைத்துள்ள வடிவத்தில் உறுதி எடுத்துப் பதவியேற்பார்.


3) இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் அரசவைத் தலைவர் அல்லது துணைத் தலைவர் அரசவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினரால் நீக்கம் செய்யப்பட்டால், அவர் இவ்வாறு தீர்மானம் இயற்றப்பட்ட நாளிலிருந்து பதவியை விட்டகல்வார்.

4) அரசவையானது அரசவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரை நீக்குவது தொடர்பான ஒரு பொருட்பாடு குறித்துக் கூடி விவாதித்துக் கொண்டிருக்கையில் அவர் அத்தகைய அமர்விற்கு தலைமை தாங்க மாட்டார்.


5) அரசவைத் தலைவர் அல்லது துணைத் தலைவர் இருக்கையானது அவரது நீக்கம், இறப்பு, அல்லது வேறு காரணத்தால் வெற்றிடமாகுமானால், அறுபது நாட்களுக்குள் அவருக்கான மாற்றீடு தெரிவுசெய்யப்டுவார்.

அரசவை உறுப்பினர்கள் பதவியேற்பு அல்லது உறுதி எடுத்தல்
• அரசவை உறுப்பினர் ஒவ்வொருவரும் தமது இருக்கையில் அமர்வதற்கு முன் அரசவைத் தலைவர் அல்லது துணைத் தலைவரின் முன்நிலையில் அல்லது அவர் சார்பில் அமர்த்தப்படுகின்ற ஒருவரின் முன், சட்டம் குறித்துரைத்துள்ள வடிவில் பதவியேற்பும், உறுதிமொழி எடுப்பும் மேற்கொண்டு ஒப்பமிடுவார்.

அரசவையில் வாக்களித்தல்
• இந்த ஆவணத்தின் உறுப்புகளிலும் பிற வழிகளாலும் வழிசெய்யப்பட்டுள்ளவை தவிர, அரசவையின் பிற பணிகள் யாவும் சாதரண பெரும்பான்மை வாக்கினால் தீர்வு செய்யப்படும். பணிப் பொருட்பாடுகள் தொடர்பாக வாக்குகளின் சரிசம நிலை ஏற்படுமானால், அரசவைத் தலைவர் தம் விருப்புரிமையின் பேரில் முடிவெடுக்கும் வாக்கு அளிப்பதன் மூலம் அப்பொருட்பாடுக்குத் தீர்வு காணலாம்.

அரசவையின் நிறைவெண்
• அரசவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கையில் மூன்றிலொரு பங்கினர் வருகை தந்திருந்தால், எந்தப் பொருட்பாடு குறித்தும் தீர்வு காண அதற்கு உரிமை உண்டு.


சட்டமுன்வடிவுகள் அறிமுகமும் இயற்றலும்
• அரசவை உறுப்பினர் எவரும் எந்தவொரு சட்ட முன்வடிவு அல்லது தீர்மானத்தை அறிமுகம் செய்வதற்கும், அரசவை விதிகளில் குறித்துரைத்துள்ளபடி எந்தவொரு திருத்தமும் முன்மொழிவிற்கும் உரிமை உடையவராவார்.


அரசவையின் நடைமுறை விதிகள்

• அரசவை இந்த அரசமைப்பின் வழிவகைகளுக்கு இணங்க மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரு பங்குக்கு மேற்பட்டவர்களின் ஒப்புதலோடு நடைமுறை விதிகளையும் கூட்ட வழிமுறையையும் வகுத்துக்கொள்ளும்: இவ்வாறான விதிகள் அதுமுதல் செயலுக்கு வரும்.

அவசரச் சட்டங்கள் பிறப்பித்தல்
1) அரசவையினால் இயற்றப்பட்டு பிரதமருக்கு அனுப்பப்படும் சட்டமுன்வடிவு அல்லது முன்மொழிவு எதுவாயினும் அவர் அதற்கு இசைவளித்த உடனே சட்;டமாக கருதப்படும.; இவ்வாறான சட்டத்திற்கு ஒப்புதல் அளிப்பதா என்பதை பிரதமர் 14 வேலை-நாட்களுக்குள் முடிவு செய்யவேண்டும்;;; அல்லது அவர் தக்கவை எனக் கருதப்படும் பரிந்துரைகளோடு முன்மொழிவை அக்காலத்திற்குள் அரசவைத்தலைவருக்கு அனுப்பலாம.; அதன் பிறகு, நா.க.த.அ. அரசவை முன்மொழிவுக்கான பிரதமர்; பரிந்துரைகள் மீது கலந்தாய்வு செய்து, அடுத்த 14 வேலை-நாட்களுக்குள் மறுஒப்புதலுக்காக பிரதமருக்கு அதை அளித்திடும்.


2) அரசவை அமர்வில் இல்லாத நேரத்தில் பெருமுக்கியத்துவம் வாய்ந்த சிக்கலேதும் எழுந்து அரசவையைக் கூட்ட வேண்டிய அவசரத் தேவை எழுமானால், பிரதமர், அமைச்சரவை

உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் இணங்கிப்போய் அவசரச் சட்டங்கள் பிறப்பிக்கலாம். இவற்றுக்குச் சட்டத்திற்குரிய அதே வலிமை இருக்கும்.


3) மேற்குறிக்கப்பட்ட அவசரச் சட்டங்கள் எதைவும் அரசவைத் தலைவர் ஊடாக தாமதப்படுத்தாது – ஆகக்கூடியது மூன்று வேலைநாட்களுக்குள் அனுப்பி வைக்கவேண்டும். அரசவை உறுப்பினர்கள் அதுபற்றி கலந்து ஆய்வு செய்து திருத்தவோ, மாற்றவோ, நீக்கவோ முடியும்.



அரசவையின்; உறுப்பினர் உறுப்புரிமை நீக்கம்
1) அரசவையின் உறுப்பினர் எவரேனும் பதவியேற்ற பின் அவரது நடத்தை அரசவையின் தகுதிகளுக்கு இணங்கி வராதெனத் தெரிந்தால், இது குறித்து நெறிமுறை ஆணையத்திற்கு (நுவாiஉ உழஅஅளைளழைn) அறிவிக்கப்படும். நெறிமுறை ஆணையம் இதுபற்றி விசாரணை செய்து உறுப்பினர் எவரையாவது நீக்க வேண்டும் என தெரிவித்தால் அந்த அறிக்கை அரசவைத் தலைவர் ஊடாக தாக்கல் செய்யப்படும். இது குறித்துத் நெறிமுறை ஆணையக அறிக்கை அரசவையில் விவாதிக்கப்பட்டு; அரசவையின் மூன்றில் இரண்டு (2ஃ3) பெரும்பான்மையினால் ஏற்றுக் கொள்ளப்பட்டால் அவர் அரசவை உறுப்பினர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டாக வேண்டும்.


2) அரசவை உறுப்பினர்கள் இவ்வாறு நீக்கப்பட்டால், பதவி விலகினால்;, புதிய உறுப்பினர்களுக்கான தேர்தல் அந்த நாளிலிருந்து 90 நாட்களுக்குள் நடத்தப்படவேண்டும்.


சிறப்புப் பொது அரசவை
1) அமைச்சரவை, அரசவைத் தலைவர் மற்றும் துணைத் தலைவர் ஆகியோரின் கூட்டு முன்மொழிவின் பேரில் சிறப்புப் பொதுப் அரசவையைக் கூட்டலாம்.


2) இப்படி ஒரு கூட்டத்திற்கான பிரதிநிதிகளின் இயைபில் அரசவையின் உறுப்பினர்கள் இடம்பெறுவர். அமைச்சரவை அரசவையுடன கலந்தாலோசித்து, அந்த அமர்விற்கான திட்டம், காலம் மற்றும் இடத்தைக் கூட்டாக முடிவு செய்யும்.


3) கூட்டத்தின் திட்டப் பொருள், காலம், இடம் ஆகியவை முடிவு செய்யப்பட்ட பின்னர் அரசவைத் தலைவர் இக்கூட்டத்திற்குரிய அறிவித்தலை; 15 நாட்களுக்குள் தெரிவிக்கவேண்டும்.



திருப்பியழைக்கும் இயங்குமுறை
• அரசவை உறுப்பினர் எவரையும், சொல்;வழியாகவோ செயல்வழியாகவோ நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் புறம்பான விதத்தில் நடந்து கொண்டதற்காக, அல்லது நோக்கங்களுக்கும் குறிக்கோள்களுக்கும் பங்களிப்பு செய்யாததற்காக, அல்லது நா.க.த.அ. தில் தன் நிலையைத் தவறாகப் பயன்படுத்தியதற்காக அவ்வட்டார வாக்காளர்கள் திருப்பி அழைக்கலாம். அரசவையின் எந்த ஓர் உறுப்பினரையும் திருப்பி அழைப்பதானால் அதற்கான நடைமுறையைத் தொடங்கும் பொருட்டு உறுப்பினரைத் தேர்ந்தெடுத்த நாட்டின் அவரது தேர்தல் வட்டாரத்தில் பங்குபற்றிய வாக்காளர் தொகையில் மூன்றில் இரண்டு (2ஃ3) பங்குக்கு மேற்பட்டவர்கள், ஒப்பமிட்டு அரசவைத் தலைவருக்கும் அனுப்பும் நடிவடிக்கையை பின்வரும் முறையில் மேற்கொள்ளல் வேண்டும்.
• வாக்காளர் முறைப்பாடும் படிவமும், தேர்தல் ஆணையாளரின் செயற்பாடும்

1) திருப்பியழைக்கும் இயங்குமுறையில் பங்கு பற்ற விரும்பும் தொகுதி வாக்காளர்கள், தேர்தல் ஆணையாளரிடமிருந்து அதற்கான குற்றப்பதிவுப் படிவத்தை தபால் ஊடாகவோ அல்லது மின்னஞ்சல் ஊடாகவோ பெறல் வேண்டும்.


2) படிவத்தில் தமது விபரங்களையும் தமது தொகுதி அரசவை உறுப்பினர் விபரம் உட்பட, அவரைத் திருப்பி அழைப்பதற்கான தகுந்த காரணங்களையும் தெரியப்படுத்துவதோடு அதற்குப் பொறுப்பேற்று உறுதி செய்தல் அவசியம்.


3) உறுதி செய்த படிபவத்தை அந்தந்த நாட்டு தேர்தல் ஆணையாளருபக்கு அனுப்பி வைத்தல் வேண்டும்.


4) அவர் படிவங்களைச் சரிபார்ப்பதோடு, தேவையேற்படின் குற்றம் சுமத்தியவர்களை அழைத்து விசாரணை செய்யலாம்.


5) மேற்படி உறுதி செய்தல் முடிவடைந்ததும் நா.க.த.அ தேர்தல் ஆணையாளருக்கு தனது குறிப்புடன் அதனை அனுப்புதல் வேண்டும்.
6) நா.க.த.அ தேர்தல் ஆணையாளர் முறைப்பாடு பற்றிய உண்மை நிலைமைகளை உறுதி செய்தபின் தனது குறிப்புடன் அரசவைத் தலைவருக்க அனுப்பி வைத்தல் வேண்டும்.


7) ஒரு வாக்காளருக்கு ஒரு முறைப்பாட்டுப் படிவமே செல்லுபடியாகும்.



அரசவைத்தலைவரின் செயற்பாடு
1) அரசவைத் தலைவருக்குத் தேர்தல் ஆணையாளரின் திருப்பி அழைத்தல் தொடர்பான விபரங்கள் கிடைக்கப்பெற்றதும் அரசவைத் தலைவர் பிரதமரிடம் தொடர்பு கொண்டு மேற்படி விடயத்துக்கான தெரிவுக்குழு தொடர்பான விபரங்களை ஆராய்தல் வேண்டும்.


2) ஆய்வின் பின் தெரிவுக்குழுவான குற்றச்சாட்டுக்களின் தன்மைக்கேற்ப மூன்று அல்லது ஐந்து அல்லது ஏழு என்ற தொகை அடிப்படையில் நியமிக்கப்படல் வேண்டும்.


3) தெரிவுக்குழுவுக்கு தலைவர் அல்லது செயலாளர் இருத்தல் வேண்டும். இவர் சம்பந்தப்பட்ட அரசவை உறுப்பினருக்கு குற்றச் சாட்டுக்களின் விபரங்களை அறிவிப்பதோடு அதற்கான விளக்கங்களைத் தருமாறும் தனது பக்க நியாயங்களை முன்வைக்குமாறும் கேட்டல் வேண்டும்.


4) குற்றம் சாட்டப்பட்ட அரசவை உறுப்பினர் தனது பக்க நியாயங்களை எடுத்துச் சொல்லவும் சட்ட நிபுணர்களை தனக்காக ஆயர் படுத்தவும், சாட்சியங்களை குறுக்கு விசாரணை செய்யவும் அனுமதிக்கப்படல் வேண்டும்.


5) அனைத்து விசாரணைகளும் நீதியான முறையில் நடைபெற்று முடிந்தபின் தெரிவுக்குழுவானது நீதிபதிகள் குழு போன்று செயற்பட்டு தனது தீர்ப்பினை வழங்க வேண்டும்.


6) வழங்கப்பட்ட தீர்ப்பானது அரசவைத் தலைவருக்கு அறிவிக்கப்படல் வேண்டும். அரசவைத் தலைவர் அதனை அமைச்சரவைக்கும் சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கும் அறிவித்தல் வேண்டும். அதன்பின் அத்தீர்ப்பானது சபையில் சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


7) அரசவையில் தனது பக்க நியாயங்களை எடுத்துரைக்க சம்பந்தப்பட்ட உறுப்பினருக்கு உரிமை உண்டு. ஆனால் சட்டத்தரணியோ சாட்சிகளையோ சபையில் ஆயர் செய்ய முடியாது.


8) சபை விவாதத்தின்பின் வாக்கெடுப்புக்கு விடப்படல் வேண்டும். மொத்த உறுப்பினர்களின் 3ல் 2 பெரும்பான்மை கிடைக்கப்பெறின் சம்பந்தப்பட்ட உறுப்பினர் உறுப்புரிமையை இழப்பார். இதனை அரசவைத் தலைவர் சபையில் பிரகடனம் செய்தல் வேண்டும்.

9) மூன்றில் இரண்டு (2ஃ3) பங்குக்கு பெரும்பான்மை கிடைக்கப்பெறாவிடின் அக்குற்றச்சாட்டுக்கள் நிராகரிக்கப்பட்டதாகக் கொள்ளல்படல் வேண்டும்.



மன்னிப்புச் செயற்பாடு
1) தீர்ப்பு அறிவிக்கப்பட்டபின் அமைச்சரவையிடமோ நெறி முறை ஆணையத்திற்கோ மேன்முறையீடு செய்யலாம்.
2) மேன்முறையீட்டின் பின்வரும் முடிவுகள் எட்டப்படலாம். ஒன்று தீர்ப்பை ரத்துச் செய்யலாம், இரண்டு தீர்ப்பை ஏற்றுக் கொள்ளலாம், மூன்று தீர்ப்பின் மாற்றங்களைச் செய்யலாம். உதாரணம் அடுத்த தேர்தலில் போட்டியிட அனுமதிக்கலாம்.


போட்டியின்றித் தெரிவான அரசவை உறுப்பினருக்கான திருப்பியழைக்கும் பொறிமுறை
இவ்வுறுப்பினருக்கான திருப்பியழைக்கும் இயங்குமுறை அரசவைத் தலைவரிடமும் நெறி முறை தெரிவுக்குழுவிடமும் ஒப்படைக்கப்படல் வேண்டும்.

அரசியலமைப்புத் திருத்தங்கள்
எந்தவொரு உறுப்பினரும் அரசியலமைப்பு தொடர்பான திருத்தங்களை சட்டவாக்கக்குழுவிற்கு அவைத்தலைவருடாக முன்வைக்கலாம். சட்டவாக்கக்குழு அத்திருத்தங்களை ஆராய்ந்து தனது பரிந்துரையை அரசவைத்தலைவருடாக அனைத்து உறுப்பினர்களிற்கும் இரண்டு வாரங்களிற்குள் அனுப்பிவைப்பர். அத்துடன் அத்திருத்தங்களை எவ்வளவு விரைவில் விவாதிக்கவேண்டும் என்ற கருத்தையும் தெரிவிக்கும். திருத்தம் முன்வைக்கப்பட்டு எட்டு வாரங்களிற்குள் அரசவை கூட்டப்பட்டு திருத்தம் தொடர்பாக விவாதம் நடாத்தி வாக்கெடுப்பிற்கு விடவேண்டும். வாக்கெடுப்பின் போது சமூகமளித்த உறுப்பினர்களின் முன்றில் இரண்டு தொகை உறுப்பினர்களின் சம்மதத்துடன் நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அரசியலமைப்பினுள் சேர்த்துக்கொள்ளப்படும். திருத்தம் என்பது அரசியலமைப்பில் கூற்றுக்களை சேர்த்தல் நீக்குதல் மாற்றம் செய்தல் என்பன உள்ளடங்கும்.

ஏனைய விடயங்கள்
உள்நாட்டு அமைப்புகளுடன் உறவு
நா.க.த.அ. கட்டமைப்புக்கள் இவ்யாப்பின் குறிக்கோள்களுக்கு முரணாகாத உள்நாட்டு அமைப்புகளோடு கூட்டாக வேலை செய்யும்.
தேர்தல் ஆணையம்
பிரதமர் அரசவையின் பரிந்துரை அடிப்படையில் மூன்று உறுப்பினர் கொண்ட தேர்தல் ஆணையத்தை அமர்த்துவார். வருங்கால நா.க.த.அ. தேர்தல்களை நடத்துவதற்குத் தேர்தல் ஆணையம் பொறுப்பாகும். தேர்தல் ஆணைய உறுப்பினர்கள் அரசவையிலோ அல்லது மதியுரைக்குழுவிலோ அல்லது அரசவை சார்ந்த எந்தக்குழுவிலும் உறுப்பினராய் இருக்கக் முடியாது.
மதியுரைக் குழு
நா.க.த.அ. அமைக்கப்படுவதில் மதியுரைக்குழு வகித்த தனித்துவமான முக்கியப் பங்கினைக் கருத்தில் கொண்டு இப்போதைய இயைபுடன் மதியுரைக்குழு நா.க.த.அ. முதல் பதவிக் காலத்தின் போதும் தொடர்ந்து இயங்கிவரும்.
அரசவை, பிரதமர்; அல்லது அமைச்சரவை ஆகியோர் எந்த விடயங்களிலும் மதியுரைக்குழுவிடம் ஆலோசனை கேட்கலாம். மதியுரைக்குழு பிரதமருக்கு அல்லது
அமைச்சரவைக்கு ஆலோசனைகள் வழங்கலாம். மதியுரைக்குழுவின் ஆலோசனைகள் அரசவையையோ, பிரதமரையோ அல்லது அமைச்சரவையோ கட்டுப்கடுத்தாது.
நெறிமுறை ஆணையம்
அரசவையின் இணக்கப்பாட்டுடன் அமைச்சரவை நெறிமுறை ஆணையத்தை நியமிக்கும். இவ்வாணையத்தில் மூன்று உறுப்பினர்கள் அங்கம் வகிப்பர்.

அத்தியாயம் 2
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் திறைசேரி

பகுதி அ: அமைச்சின் பொறுப்புக்கள்
1. வரவு-செலவு திட்டம்
• வரவு-செலவு திட்டமானது அரசவையால் அங்கீகரிக்கப்பட்டு, பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு ஒரு சட்டபூர்வமான ஆவணமாகும். வரவு-செலவு திட்டத்தின் இரு அடிப்படை விடயங்கள் ஆகியன அதன் வருமானங்களும், செலவீனங்களும் ஆகும். வருமானங்கள் பல்வேறுபட்ட வழிகளின் மூலம் தீர்மானிக்கப்படும். அமைச்சின் நிர்வாகச்செலவுகள், துறைசார் ஒதுக்கீடுகள், முதலீட்டுக்கான செலவீனங்கள், பொதுநல கொடுப்பனவுகள் என்பன செலவீனங்களில் உள்ளடக்கப்பட வேண்டியன ஆகும்.

2. நிதியாண்டு
• நிதியாண்டானது ஜனவரி முதலாம்; திகதி தொடக்கம் டிசம்பர் முப்பத்தொன்று வரையாகும்.

3. நிதியமைச்சர்
• பொருளாளரே நிதியமைச்சரும் ஆவார். இவர் செலவீனங்களுக்கும், வருமானங்களும் பொறுப்பானவர் ஆவார். இவர் திறைசேரியின் தலைவராகவும், பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பதில் முக்கிய பங்கும் வகிப்பார். இவர் அரசவை உறுப்பினராக இருத்தல் வேண்டும். ஒவ்வொரு வருடமும் அரசவையின் இறுதி அமர்வில், அடுத்தாண்டிற்காகன வரவு-செலவு திட்டத்தை அரசவையில் சமர்ப்பிக்க வேண்டும்.

4. கொள்கை வகுப்பில் பொருளாளரின் பங்கு
• நிதியமைச்சின் கொள்கை வகுப்பு அனைத்துக்கும் இவரே முழுப் பொறுப்பும் உடையவர் ஆவார். பொருளாதாரக் கொள்கை, பொருளாதார அபிவிருத்தி;, பொருளாதாரப் பொதுநலன்;, வரி விடயம், கடன் பெறுதல,;; வங்கி முறைமை, பணம் விடயம், தமிழீழத்திற்கான அந்நிய முதலீடு;, கணக்கெடுப்பும் புள்ளிவிபரங்களும்; அண்டை நாடுகளுடனான வர்த்தகமும் நிதி உறவுகளும் இவற்றின் உள்ளடக்கம் ஆகும்.

5. வருடாந்த வரவு-செலவு மதிப்பீடு
• நிதியமைச்சர் ஆனவர் ஒவ்வொரு துறைக்குமான நிதி ஒதுக்கீடு உட்பட வரவுசெலவு அறிக்கையை கட்டாயமாக தயாரித்து அரசவையில் சமர்ப்பிக்க வேண்டும்.
1) ஒவ்வொரு துறைக்குமான ஒதுக்கப் பட்ட தொகை பெறப்பட்ட தொகை எதிர்பார்க்கும் தொகை அந்த அறிக்கையில் உள்ளடக்கப்படல் வேண்டும். இவற்றில் நடப்பு நிதியாண்டுக்கான ஒப்பீட்டு எண்ணிக்கைகளும் உள்ளடங்கும்.

2) அறிக்கையில் உள்ளபடி காலவரையறைக்கு உட்பட்ட ஒவ்வொரு துறைக்குமான மதிப்பிடப்பட்டளூ கிடைத்ததும், கிடைக்கப்பெற இருப்பதுமான தொகையும் அத்துடன் நடப்பு நிதியாண்டுக்கான ஒப்பீட்டு எண்ணிக்கைகளும் உள்ளடங்கும்.

6. வரவு-செலவு இடைக்கால அறிக்கை
• வரவு-செலவின் இடைக்கால அறிக்கையின் நோக்கம் என்னவெனில், நிதி செயல்பாடுகள் அதன் பொருளாதாரக் கொள்கைகளின் குறிக்கோள்களுடனும், செயல்திட்டங்களுடனும் ஒத்துப் போகின்றனவா என்று மதிப்பீடு செய்து பார்பதற்காகும்.
• ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கும் ஒரு தடவை, நிதியமைச்சர் ஆனவர் அந்த ஆறு மாதங்களுக்கும் உரிய புதிப்பிக்கப்பட்ட வரவு-செலவு அறிக்கையை அரசவையில் சமர்ப்பித்தல் வேண்டும்.

7. வருடாந்த நிதி அறிக்கை
1. ஒவ்வொரு நிதியாண்டுக்குமான வருடாந்த நிதி அறிக்கையை பொருளாளர் கட்டாயமாக தயாரிக்க வேண்டும்.


2. ஒவ்வொரு நிதியாண்டு அறிக்கையும் கட்டாயமாக பின்வரும் விடயங்களை உள்ளடக்க வேண்டும்:
• நிதியமைச்சர் ஆனவர் குறிப்பிட்ட நிதி அறிக்கை வரைவிலக்கணங்களுக்கு உட்பட்டு,
• அவரே சுயமாக தயாரிக்க வேண்டும்.

முறையே:
1) ஒவ்வொரு நிதியாண்டு இறுதியிலும் நா.க.த.அ.இன் நிதி நிலைமை
2) பொது வங்கிக் கணக்கின் பரிமாற்றங்கள், அத்துடன்
3) ஒரு குறிப்பிட்ட நிதியாண்டிற்கான பல்வேறு துறைக்குமான நிதிப் பரிமாற்றங்கள்.
3. நா.க.த.அ.இன் வங்கிக்கணக்குகளில் உள்ளீடு செய்யப்பட்ட பண விபரங்கள்.
4. இந்த நிதியாண்டின் பயன்படுத்தப்படாத அண்ணளவான தொகையின் அடிப்படையில் அடுத்த

நிதியாண்டுக்கான தீர்மானங்கள் அண்ணளவாக உள்ளடக்கப் பட வேண்டும்.

5. நடப்பு நிதியாண்டில், அமைச்சர்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து அவர் செலவழித்த தொகையும், அவரது கடப்பாடுகளுக்காக அவர் மேலும் கொடுக்க வேண்டிய தொகையும் இதில் உள்ளடங்க வேண்டும்.


6. நடப்பு நிதியாண்டுக்காக ஒதுக்கப்பட்ட ஆனால் பாவிக்கப்படாத தொகை அடுத்த நிதியாண்டுக்கு கொண்டு செல்லப்படுவதற்க்கான காரணங்களை உள்ளடக்கிய அறிக்கை உள்ளடக்கப் பட வேண்டும்.
7. நடப்பு நிதியாண்டில் நிதியமைச்சருக்கு ஒதுக்கப்பட்ட பணத்தில் இருந்து அவசர தேவைகளுக்காக கொடுக்கப்பட்ட பணக்கொடுப்பனவுகள் உள்ளடக்கப்பட வேண்டும்.
8. நடப்பு நிதியாண்டில் நா.க.த.அ.இனால் வழங்கப்பட்ட உறுதியை நிறைவேற்றுவதற்காக கொடுக்கப்பட்ட கொடுப்பனவுகளின் விபரங்கள் உள்ளடக்கப்பட வேண்டும்.
9. நடப்பு நிதியாண்டில் உறுதி வழங்கப்பட்ட கொடுப்பனவுகளுக்காக நிதியமைச்சரினால் பெற்றதும், மீளப்பெறப் பட்டதுமான பண விபரங்களை உள்ளடக்கப் பட்டிருத்தல் வேண்டும், அத்துடன்
10. கணக்காளர்-நாயகத்தினால் இவை பரிசீலிக்கப்பட்டிருத்தல் வேண்டும். இப்படியாக பரிசீலிக்கப்பட்ட அறிக்கை கட்டாயமாக அரசவைக்கு சமர்ப்பிக்கப்படல் வேண்டும்.


பகுதி ஆ: நிதி நிர்வாகம்
1. நிதி நிர்வாகத்தின் வரைவிலக்கணம்.
1) அரசவையின் உண்மையான நோக்கமானது நா.க.த.அ.இற்கான ஒரு திறைசேரியை அமைத்து அதை அறிவிக்கும் வரைவிலக்கணத்தை கொண்டதாகவும், அதற்கேற்ற உறுதியான நிதி நிர்வாக கொள்கைகளை கொண்டதாகவும் இருத்தல் வேண்டும். இது தமிழீழ மக்கள் அனைவரினதும் சமூக, பொருளாதார தேவைகளை நியாயமான முறையில் பூர்த்தி செய்வதாக இருத்தல் வேண்டும். உறுதியான நிதி நிர்வாகம் கொண்ட நா.க.த.அ.இன் திறைசேரி கட்டாயமாக, நேரத்திற்கு நேரம், முழு அளவிலான, சரியான, நா.க.த.அ. இனதும் அதனுடைய நிறுவணங்;களினதும் நிதி சம்பந்தப்பட்ட செயல்பாடுகளை அறியத்தர வேண்டும். பின்வரும் கொள்கைகள் இந்த நிர்வாக வடிவமைப்பின் வரையறைகளாக இருக்கும்.
2) கெட்டியான வருமானம்
2. நா.க.த.அ. இற்கு கிடைக்கப்பெறும் எல்லாவிதமான பண வருமானங்களும்
• செயற்குழுக்கள், நாடு ரீதியான குழுக்கள், அதிகாரம் அளிக்கப்பட்ட தனி நபர்கள் பெரும் பணங்களை கூட்டியோ, குறைக்காமலோ, 72 மணித்தியாலங்களுக்குள் குறிப்பிட்ட வங்கிக்கணக்கில் இடல் வேண்டும்.
3. கெட்டியான நிதியம்
• கெட்டியான நிதிக்கான ஒரு கணக்கு ஏற்படுத்தப் படவேண்டும். கெட்டியான வருமானத்தில் வரும் எல்லாப் பணங்களும் இந்தக் கணக்கில் வரவு வைக்கப்படல் வேண்டும்.
4. பொதுக்கணக்கு
• நிதியமைச்சர் ஆனவர் அங்கீகரிக்கப்பட்ட பண முதலீட்டு நிறுவனங்களில் நா.க.த.அ. இன் பெயரில் பொதுக்கணக்கை ஆரம்பித்து நிர்வகித்தல் வேண்டும்.
5. உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன் எடுப்புக்கள்
• நா.க.த.அ.இனால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட கடன் எடுப்புக்கள் அல்லது மற்றைய ஒப்பந்தங்கள் அல்லது உடன்படிக்கைகள் பூர்த்தி செய்வதற்காக நிதியமைச்சர்; கெட்டியான நிதியிலிருந்து கொடுப்பனவுகளை மேற்கொள்வார். இதற்காக நிதியமைச்சரினால் பெறப்பட்டதும், மீளப்பெறப் பட்டதுமான பணத்தொகையானது கெட்டியான நிதியத்தில் இடப்படல் வேண்டும்.
6. கெட்டியான நிதியத்திலிருந்து கடன் எடுப்புகள்
• கெட்டியான நிதியத்திலிருந்து கொடுக்கப்படும் கடன்களுக்கான நிபந்தனைகளையும், காலவரையரைகளையும் நேரத்திற்கு நேரம் நிதியமைச்சரினால் தீர்மானிக்கப்படும்.
7. பொதுக்கணக்கு பதிவேடு
• நிதியமைச்சர்; ஆனவர் கட்டாயமாக பதிவேட்டை உருவாக்கி நிர்வகித்துப் பதிவு செய்ய வேண்டியன.
1) பொதுக்கணக்கின் பணப்பரிமாற்றங்கள்
2) பொதுக்கணக்கில் இருந்து கொடுக்கப்பட்ட செலவீனங்களும் கடைமைப்பாடுகளும்.
3) நிதியமைச்சரினால் தீர்மானிக்கப்பட்ட மற்றைய பணப்பரிமாற்றங்களும், கணக்கின் நிலுவைகளும்.

8. நா.க.த.அ.இன் துறைகளின் கணக்கு விபரம்
1) நிதியமைச்சரின் எழுத்து மூலமான அங்கீகாரத்துடன் நா.க.த.அ.இன் ஒரு துறையானது அங்கீகரிக்கப்பட்ட பண முதலீட்டு நிறுவனத்தில் அல்லது நிறுவனங்களில், நிதியமைச்சரினால் தீர்மானிக்கப்பட்ட நிபந்தனைகளுக்கும், காலவரையறைகளுக்கும் உட்பட்டு, ஒரு கணக்கை ஆரம்பித்து நிர்வகிக்கலாம்.
2) நிதியமைச்சரினால் வேறுவிதமாக எழுத்து மூலமாக தீர்மானிக்கப் படாத பட்சத்தில், இந்த பகுதிக்குள் திறக்கப்பட்ட கணக்கு பொதுக்கணக்கின் ஒரு பகுதியாக அமையாது.
3) இந்தப் பகுதிக்குள் திறக்கப்பட்ட கணக்கில் இருந்து, இதன் விதிநிபந்தனைகளையும் வழிமுறைகளையும் மீறி, பணம் எடுத்துக் கொள்ளப்படக் கூடாது.
9. பெறப்படும் பொதுப்பணம்
• நா.க.த.அ.இன் சார்பில், ஒரு தனி நபரினால் நிபந்தனைகளுக்கும், காலவரையறைகளுக்கும் உட்பட்டு, பெறப்படும் அல்லது சேகரிக்கப்படும் பொதுப்பணமானது, அன்றாடமோ அல்லது நிதியமைச்சரால் தீர்மானிக்கப்பட்ட காலஇடைவெளிக்குள், பகுதி ஆ.8 இற்குக்கீழ் திறக்கப்பட்ட பொதுக்கணக்கில் வைப்பில் இடப்படல் வேண்டும்.
10. எப்படி பணம் விநியோகிக்கப்படல் வேண்டும்.
• நா.க.த.அ.இன் கெட்டியான நிதியத்திலிருக்கும் பொதுக்கணக்கில் இருந்து எடுக்கப்படும் பொதுப்பணமானது பின்வரும் விதிகளுக்கு உட்பட்டாதாகும்.
1) நடப்பு நிதியாண்டில் நிதியமைச்சர் தனக்கு தேவையான பணத்தை எத்தனை தடவைகளும் எடுத்துக் கொள்ளலாம்.
ழ நடப்பு நிதியாண்டின் பொதுக்கணக்கில், பொதுப்பணத்தின் வரவுகளும் கொடுப்பனவுகளும் கணக்கீடு செய்தல் வேண்டும்.
ழ கீழே ஆ1 இல் நிரல்படுத்தப்பட்ட அல்லது அதேபோன்ற தெளிவான மதிப்பீட்டுத் தொகை கொண்ட ஒரு அதிகாரப் பத்திரம் தயாரித்தல், அத்துடன்
ழ அந்தப்பத்திரம் கையெழுத்திடப்பட்டு கணக்காளர்-நாயகத்திடம் ஒப்படைககப்படல் வேண்டும்.
2) கணக்காளர்-நாயத்தினால் கையெழுத்திடப்பட்டு, பின்னர் பிரதமர் அங்கீகாரம் பெற்ற பின்னர், இந்த அதிகாரப் பத்திரத்தை கொண்டு நிதியமைச்சரானவர் பொதுக்கணக்கில் இருந்து பணத்தை பெற்றுக் கொள்ள முடியும்
3) அதிகாரப் பத்திரத்தில் கையெழுத்து இட முன்னர், கணக்காளர்-நாயகம் ஆனவர் குறிப்பிடப்பட்ட தொகை சட்டபூர்வமான பாவனைக்குரியதா என்பதனை கட்டாயமாக ஆராய்ந்து நிச்சயப் படுத்திக் கொள்ளல் வேண்டும். பத்திரத்தில் கையெழுத்திடப்பட்ட பின்னர், கணக்காளர்-நாயகம் ஆனவர் பத்திரத்தை கட்டாயமாக நிதியமைச்சருக்கு திருப்பி அனுப்பி வைக்க வேண்டும், அதை நிதியமைச்சர் பிரதமரின் கையெழுத்திற்கும், அங்கீகாரத்திற்கும் கட்டாயமாக பிரதமரிடம் சமர்ப்பிக்க வேண்டும். பின்னர், பத்திரத்தை ஆவணப்படுத்த வேண்டும்.

11. பொதுக்கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடு செய்தல்
1) பொதுக்கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடு செய்யும் முன்னர் நிதியமைச்சர் ஆனவர் நா.க.த.அ.இன் அமைச்சரவைக்கு விண்ணப்பித்து, அவர்களதும், கணக்காளர்-நாயகத்தினதும் அங்கீகாரத்தைப் பெற வேண்டும். அந்தப் பத்திரத்தை பிரதமரும் கணக்காளர்-நாயகமும் தமது கையெழுத்துக்களை இட்டு அங்கீகாரம் கொடுத்த பின்னர்தான் நிதியமைச்சர் அவரது திட்டத்தை நடைமுறைப் படுத்தலாம்.

2) முதலீடுகளில் இருந்து கிடைக்கப்பெறும் வருமானங்கள் யாவும் ஆ11(1) இல் உள்ளபடி, கெட்டியான நிதியத்தின் வைப்பில் இடப்படல் வேண்டும்.

பகுதி இ: கணக்காளர் செயலகம்
1. கணக்காளர்-நாயகம் ஆனவர்
• சுதந்திரமாக செயல்படக் கூடியவராகவும், அதேசமயம் நா.க.த.அ.இன் உறுப்பினர் அல்லாத ஒருவராகவும் இருத்தல் வேண்டும். இவர் அரசவைக்கு, பொது நிர்வாக துறைகளுக்கும் நிதித்துறை நிர்வாகம் சம்பந்தப்பட்ட தனது சுதந்திரமான, நிபுணத்துவ கருத்துக்களை வழங்குவார். சட்டபூர்வமான தேவைகளையும் மற்றும் பொது துறைகளின் வளங்களை எவ்வாறு பொருத்தமானதாகவும், ஆக்கபூர்வமானதாகவும் பயன்படுத்தலாம் போன்ற கருத்துக்களையும் இவர் வழங்குவார். கணக்காளர்-நாயகம் ஆனவர் பரிசீலனை செய்வதற்கு தேவையான கணக்குகள், பதிவுகள், ஆவணங்கள், தகவல்கள் அனைத்தையும் தடையின்றி பெற்று முழுச் சுதந்திரத்துடன் இயங்குவதற்கு உரித்துடையவர் ஆவார்.
2. கணக்காளர்-நாயகம் நியமனம்
• அரசவையின் முன் மொழிவின் பெயரில், பிரதமர் இவரை தெரிவு செய்வார்.
3. கணக்காளர்-நாயத்தின் பொறுப்புக்கள்
• கணக்காளர்-நாயகம் தனக்குத் தேவையான நேரங்களில், தகுதி வாய்ந்தவர்களையும், பொருத்தமானவர்களையும் தனக்கு உதவிக்கு தன்னுடைய வேலைகளுக்கு அமர்த்துவார்.
4. கணக்காளர்-நாயத்தின் பதவி இடைநீக்கம்
• அமைச்சரவை பின்வரும் சந்தர்ப்பங்களில் கணக்காளர்-நாயகத்தை பதவியிலிருந்து இடைநீக்கலாம்.
1) பொருத்தமற்றவர் எனக் கருதும் பட்சத்தில்
2) கடைமையை அலட்சியம் செய்பவராக இருப்பின்
3) நேர்மையற்ற செயல்பாடுகள் உடையவராக இருப்பின்

அமைச்சரவை கட்டாயமாக,
 பதவி இடைநீக்கத்திற்கான காரணங்களை விளக்கி அறிக்கை ஒன்றினை கணக்காளர்- நாயகத்திற்கு கையளிக்க வேண்டும்.


 பதவி இடைநீக்கம் செய்யப்பட்டு 7 நாட்களுக்குள் அறிக்கையின் பிரதியை அரசவைத் தலைவரிடம் கையளிக்க வேண்டும்.
ழ கணக்காளர்-நாயகம் இவ்அறிக்கைக்கான பதிலை அரசவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கலாம்.
ழ கணக்காளர்-நாயகத்தை அரசவையின் தீர்மானத்தின் படி, அவரின் பதவியிலிருந்து நீக்கப் படலாம் அல்லது மீண்டும் பதவியில் அமர்த்தப் படலாம்.
5. கணக்காளர்-நாயகத்தின் பதவி வெற்றிடம்
• கணக்காளர்-நாயகத்தின் பதவி பின்வரும் சந்தர்ப்பங்களில் வெற்றிடமாகலாம்
1) மரணித்தால்

2) அரசவைத் தலைவரிடம் எழுத்து மூலம் பதவி விலகல் கடிதத்தை கையளித்தல்
3) அரசவையின் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டால்
6. பொதுப்பணத்தில் உருவாக்கப்பட்ட அமைப்புக்களும், திட்டங்களும் பரிசீலனை செய்யப்படுத்தல்
• நிதியமைச்சரின் வேண்டுகோளுக்கு இணங்க, கணக்காளர்-நாயகம் ஆனவர் பொதுப்பணத்தில் உருவாக்கப்பட்ட செயற்திட்டங்களையும், அவற்றின் சிறப்புப்பயன்களையும், லாபாகரங்களையும் கட்டாயமாக பரிசோதிப்பார். பரிசோதனையின் முடிவுகளை, கணக்காளர்-நாயகம் ஒரு அறிக்கையாகத் தயாரிப்பார். இந்த அறிக்கையின் பிரதிகளை பிரதமருக்கும், நிதியமைச்சருக்கும் கட்டாயமாக சமர்ப்பிப்பார்.
7. கணக்காளர்-நாயகத்தின் வருடாந்த அறிக்கை
• கணக்காளர்-நாயகத்தின் அறிக்கையானது அவரின் கணக்கு சம்பந்தமான அவதானங்களையும், கருத்துக்களையும் நா.க.த.அ.இன் நிதி இருப்பின் அடிப்படையில் கொண்டு அமைந்திருக்கும். குறிப்பாக, இவ்வறிக்கையானது நா.க.த.அ.இன் நடப்பு நிதியாண்டு செயல்பாடுகளையும், நிதி நிலைமைகளையும் கொண்ட ஒரு குறுகிய ஆய்வாக இருக்கும். இவை, கடந்த வருடத்தின் பெறுபேறுகளையும், எதிர்கால கணிப்பீட்டு திட்டங்களையும் கொண்ட ஆhய்வின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1) இவ் அறிக்கையானது
1. கணக்காளர்-நாயகத்தின் அபிப்பிராயத்தின் படி,
ழ கடந்த நிதியாண்டில் நிதியமைச்சரினால் காட்டப்பட்ட கணக்குகளும், பதிவுகளும் நிதி பரிமாற்றங்களுக்கான நிதியமைச்சரானவரின் அறிக்கையை பிரதி பலிக்கின்றனவா,
ழ ஒவ்வொரு பொதுநிர்வாகத்துரையினதும் நிதி அறிக்கைகள் கடந்த ஆண்டின் நிதி நிலைமைகளையும், செயற்திட்டங்களின் பெறுபேறுகளையும், பணப்புழக்கங்களையும் பிரதிபலிக்கின்றனவா,
ழ நிதியமைச்சரானவரினாலோ அல்லது பொதுதுறைகளினாலோ கட்டுப் படுத்தப் பட்டிருக்கும், பெற்றுக்கொண்ட, செலவிட்ட, முதலீடு செய்யப்பட்ட பணம், வாங்கி விற்ற சொத்துக்கள், கொடுக்கப்பட வேண்டிய கடன்கள் போன்றவை போதியளவு நியாயமான உத்தரவாதங்கள், நிதியமைச்சரினதும் பொதுதுறைகளினதும் நிதி பரிமாற்றங்கள் சரியான முறையிலும் சட்டரீதியாகவும் என்பதனையும், அத்துடன்
2. கணக்காளர்-நாயகம் ஆனவர் ஏதாவதொரு விடயத்தினை அரசவைக்கோ அல்லது அரசாங்கத்திற்கோ கவனத்திற்கு கொண்டு வர விரும்பின் கொண்டு வருதல்.
2) கணக்காளர்-நாயகம் பின்வரும் பிரதிகளை கட்டாயமாக அரசவைத் தலைவரிடம் கையளிக்கப் பட வேண்டும்.
• அவரது அறிக்கை
• பொதுத்துறைகளின் நிதி அறிக்கைகளும், நிதியமைச்சரானவரின் அறிக்கைகளும் முக்கியத்துவமானதாக கருதும் பட்சத்தில் அவற்றை அவர் பிரசூரிக்குமாறு அரசவைத் தலைவரிடம் பரிந்துரைக்கும் அறிக்கை.

8. அரசவையில் சமர்ப்பிக்கப்பட வேண்டிய அறிக்கைகளும் மற்றைய ஆவணங்களும்
• கணக்காளர்-நாயகத்திடம் இருந்து பெறப்பட்ட அறிக்கைகளையும் மற்றைய ஆவணங்களையும், அரசவைத் தானவர் ஆனவர், அடுத்த அமர்வின் முதல் நாளுக்கு பிந்தாமல், அவற்றை அரசவைக்கு கட்டாயமாக சமர்ப்பிக்க வேண்டும்.
• நிதி அறிக்கை அட்டவணைப் படுத்தல் ஆ1
• கணக்காளர் - நாயகத்திற்கு,
• கெட்டியான நிதியிலிருந்து எடுக்கப்படும் பொதுப்பணத்தில் ----------------- தொகையில் ................. கால வரையறைக்கு கொடுப்பனவுகளுக்காக தேவைப்படும்.


திகதி: ...............................

-------------------------------------------
நிதியமைச்சர்


நிதியமைச்சருக்கு, மேற்கூறப்பட்டுள்ள பணத்தொகையை சட்டரீதியாக நீங்கள் பயன்படுத்தலாம் என்று நான் உறுதிப் படுத்துகின்றேன். கெட்டியான நிதியிலிருந்து இந்தத் தொகையை நீங்கள் எடுத்து பாவிக்கலாம் என்று இதன் மூலம் உங்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுகின்றது.




திகதி : ................................ ............................................
கணக்காளர்-நாயகம்


திகதி:................................ .............................................
பிரதமர்


 


 

 

Copyright © 2010 Transnational Government of Tamil Eelam. All rights reserved